கோலாலம்பூர்:
செந்தூலின் கம்போங் பத்துவில் உள்ள மக்கள் குடியிருப்பு திட்ட (PPR) கட்டிடத்தில் இருந்து விழுந்து 12 வயது சிறுமி இன்று (ஏப்ரல் 21) உயிரிழந்தார்.
ஜாலான் எம்பாட்டில் உள்ள PPR பத்து மூடா கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து பாதிக்கப்பட்டவர் விழுந்ததாக நம்பப்படுவதாக செந்தூல் காவல்துறைத் தலைவர்வி துணை ஆணையர் அமாட் சுகர்னோ முகமட் ஜஹாரி உறுதிப்படுத்தினார்.
“இந்த சம்பவம் குறித்து இன்று பிற்பகல் 2.24 மணிக்கு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
“இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.





















