ரோமன் கத்தோலிக்க மத குருவான போப் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானார்.
போப் பொறுப்பை வகித்த முதல் லத்தீன் அமெரிக்கரான அவர் இன்று திங்கட்கிழமை(ஏப்ரல் 21) காலமானதாக வத்திகன் காணொளி மூலம் தெரிவித்தது.
12 ஆண்டுகளாக போப்பாண்டவர் பொறுப்பை வகித்த போப் பிரான்சிஸ், பல உடல் நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரின் பதவிக் காலத்தில் அதிக பதற்றம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.



















