சிங்கப்பூர் நாட்டின் முதல் அதிபராக இருந்த யூசோஃப் இஷாக்கின் மனைவி நூர் ஆயிஷா முஹமட் சலீம் இன்று தனது 91ஆவது வயதில் காலமானார்.
காலமான நூர் ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டார்.
“சிங்கப்பூர் முதல் அதிபராக இருந்த யூசோஃப் இஷாக்கின் பக்கபலமாக நூர் ஆயிஷா செயல்பட்டார். பெண்களுக்கு முன் உதாரணமாக அவர் திகழ்ந்தார்” என்று அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.





















