சட்டவிரோத கோவில் என்ற வார்த்தையை தவிர்க்குமாறு உத்தரவிடுவீர்; பிரதமருக்கு சரவணன் வேண்டுகோள்

தாப்பா: மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ  எம். சரவணன், “சட்டவிரோத கோவில்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசுத் துறைகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிமை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் அமைச்சரவையின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார். அமைச்சரவை முன்கூட்டியே விவாதிக்காமல், உடனடியாக உத்தரவை பிறப்பிக்க பிரதமருக்கு அதிகாரம் இருப்பதாக சரவணன் கூறினார்.

“(அரசு செய்தித் தொடர்பாளர்) ஃபஹ்மி ஃபட்சில், அமைச்சரவை இதைப் பற்றி விவாதிக்கவில்லை என்று கூறினார். ஆனால் எனக்கு, இது அமைச்சரவை மட்டத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. பிரதமர் முடிவெடுக்க முடியும். மேலும் இந்த விஷயத்தில் அனைத்து (அரசு) நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்கத்தின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட முடியும் என்று அவர் கூறினார்.

மலேசியாவில் இந்து கோவில்கள் நிறுவப்பட்டதைச் சுற்றியுள்ள வரலாற்று உண்மைகளை புத்ராஜெயா புறக்கணிக்கக்கூடாது என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் அன்வாருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். பல ஆலயங்கள்  அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகிகளிடமிருந்து ஒப்புதல் பெற்றன.

மலேசியாவில் பல இந்து கோயில்கள் 1965 தேசிய நிலச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே இருந்தன என்றும், அவற்றை “சட்டவிரோதமானது” என்று முத்திரை குத்துவது இந்து பக்தர்களை புண்படுத்துவதாகவும் முன்னாள் அமைச்சர் கூறினார். அன்வாரிடம் சரவணன் முறையீடு செய்தது, அதன் வளாகத்தில் உள்ள “சட்டவிரோத” இந்து கோயிலுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கூறும் தைப்பிங் மருத்துவமனை நிர்வாகத்தின் கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாகும்.

 தாப்பா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் ஆயர் கூனிங்கில் உள்ள வாக்காளர்கள் உட்பட 2018 தேர்தல் தரவுகளின் அடிப்படையில், இந்திய வாக்காளர்கள் 14% பேர் உள்ளனர். கோலாலம்பூரில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் இடமாற்றம் தொடர்பான சர்ச்சை இருந்தபோதிலும், ஆயர் கூனிங்கில் உள்ள இந்திய வாக்காளர்கள் இடைத்தேர்தலைப் புறக்கணிக்க மாட்டார்கள் என்று சரவணன் முன்பு நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here