இஸ்தான்புல் நிலநடுக்கம்; பணிநிமிர்த்தம் சென்ற துணை பிரதமர் பகிர்ந்த அனுபவம்

கோலாலம்பூர்:

அதிகாரப்பூர்வ பயணமாக துருக்கியே மற்றும் பிரிட்டன் இடையே பரபரப்பான பயண அட்டவணைக்கு மத்தியில், அவர் இஸ்தான்புல்லில் இருந்தபோது ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, ஒரு பதட்டமான தருணத்தை எதிர்கொண்டார்.

நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 23) 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இஸ்தான்புல் நகரைத் தாக்கியது.

இந்நிலையில், லண்டனுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளும் பொருட்டு, தானும் தனது குழுவினரும் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்தபோது, நிலநடுக்கம் ஏற்பட்டதாக துணை பிரதமர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் விமான நிலைய கட்டிடத்திலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது என்றும், முதல் நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்தது. சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் கட்டிடத்திற்குள் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டோம்.

இருப்பினும், சிறிது நேரத்திலேயே இரண்டாவது முறையாக குறைந்த வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் சுமார் 10 நிமிடங்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறும்படி எங்களிடம் அறிவுறுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here