புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: பாதிக்கப்பட்ட 18 பேர் இன்னும் சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கோலாலம்பூர்:

புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயாவில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 18 பேர் இன்று வரை சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிஃப்லி அகமட் தெரிவித்தார்.

அதேநேரம் நேற்று நண்பகல் நிலவரப்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 132 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்க்களுக்கு “எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, அத்தோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) யாரும் சிகிச்சை பெறவில்லை , இது எங்களுக்கு மிகப்பெரிய மன ஆறுதல் ,” என்று, நேற்று தென்கிழக்கு ஆசிய சுகாதாரம் மற்றும் மருந்து மாநாட்டை (SEACare 2025) தொடங்கி வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here