மோசமான வானிலை; தேங்காய் விலை உயர்வு

கோலாலம்பூர்:

மோசமான வானிலையால் பற்றாக்குறை ஏற்பட்டு தேங்காய் விலை உலக முழுவதும் அதிகரித்துள்ளது. அதுபோல மலேசியாவிலும் தேங்காய்த் தட்டுப்பாடு நிலவுகிறது.

தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டு விநியோகம் சுருங்கிவிட்டது. சில இடங்களில் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகள் தேங்காய் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன.

இந்நிலையில் வாடிக்கையாளர்களும் மாற்றுவழிகளைக் கண்டறிய வலியுறுத்தப்படுகிறது. அதாவது, வேகன் பலி போன்றவை தேங்காய்ப் பாலுக்குப் பதிலாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

உலகில் மிகப்பெரிய தேங்காய் உற்பத்தி நாடான பிலிப்பைன்சில் 2025ஆம் ஆண்டில் 20 விழுக்காடு உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்நாட்டில் நிலவும் மோசமான வானிலையே அதற்குக் காரணம். வறண்ட பருவம் முதல் பருவகால புயல் வரை பிலிப்பைன்சை வாட்டி வருகிறது.

“பருவமாற்றமே குறைவான தேங்காய் விநியோகத்துக்கு முக்கிய காரணம்,” என்று ஆக்ஸிலம் ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைவர் ஹென்றி ராபேரோகா மின்அஞ்சல் வழியாகச் சொன்னார்.

இதனால் உற்பத்தி குறைந்தது, சாகுபடி தாமதமானது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here