திடீரென தீப்பற்றிய வீடு; ஆறுபேர் கொண்ட குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது

பாலிங்:

ம்போங் செபராங் பெக்கானில் உள்ள ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் வீடு நேற்று இரவு தீயில் எரிந்து நாசமானது.

73 வயதுடைய தம்பதியினரும், எட்டு மற்றும் 11 வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட அவர்களது குடும்பத்தினர், பாலிங் மசூதியில் நடந்த ஒரு மத சொற்பொழிவில் கலந்து கொண்டு மக்ரிப் தொழுகையை நிறைவேற்றிவிட்டு திரும்பி வந்தபோது, ​​அவர்களின் வீடு தீப்பிடித்து எரிந்ததைக் கண்டதாக நம்பப்படுகிறது என்று,பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் சுல்கைரி மாட் தன்ஜில் தெரிவித்தார்.

நேற்றிரவு 9.07 மணிக்கு தீ விபத்து குறித்து தனது குழுவிற்கு அவசர அழைப்பு வந்ததாககவும், அவரும் ஆறு தீயணைப்பு வீரர்களும் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அவர் சொன்னார்.

“அங்கு வந்ததும், கல் தரைத்தளம் மற்றும் மர மேல் தளம் கொண்ட இரண்டு மாடி வகுப்பு B (தற்காலிக) வீடு ஏற்கனவே 95 சதவீதம் அழிக்கப்பட்டதைக் கண்டோம்” என்றார்.

கம்போங் லாலாங், கோலா கெட்டில் தன்னார்வ தீயணைப்புப் படை (பிபிஎஸ்) 15 பணியாளர்களுடன் இந்த நடவடிக்கைக்கு உதவியதாக சுல்கைரி மேலும் கூறினார்.

தீயை முழுமையாக அணைக்கவும், இரண்டு மீட்டர் தொலைவில் உள்ள அண்டை வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கவும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனது, “சம்பவத்தில் எந்த உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணமும் மொத்த இழப்புகளும் இன்னும் விசாரணையில் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here