பினாங்கு இரண்டாவது பாலத்தில் படகில் இருந்து விழுந்த நபரைத் தேடும் பணி தொடர்கிறது

 இன்று காலை சுல்தான் அப்துல் ஹலிம் மு’அத்ஸாம் ஷா பாலத்தின் (பினாங்கு இரண்டாவது பாலம்) கி.மீ4.2இல்  படகில் இருந்து விழுந்து ஒருவர் நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது.

பினாங்கு தீயணைப்பு  மீட்புத் துறை இயக்குநர் ஷோகி ஹம்சா கூறுகையில், விழுந்தவர் இஸ்மாயில் அகமது (28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். பத்து காவான் தீயணைப்பு  மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு பணியாளர்கள் இன்னும் அந்த நபரைத் தேடி வருவதாக அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் மீனவர்களும் மலேசிய கடல்சார் அமலாக்க முகமை ஊழியர்களும் உதவி வருவதாக ஷோகி கூறினார். இந்த சம்பவம் குறித்து காலை 10.40 மணியளவில் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது பாலத்தில் படகு 274ஆம் எண் கம்பத்தில் மோதியதாகவும், இதனால் படகோடி கடலில் விழுந்ததாகவும் நம்பப்படுவதாக ஷோகி கூறினார். பாதிக்கப்பட்டவரின் தந்தையும் நண்பரும் அந்த நேரத்தில் அதே இடத்தில் மற்றொரு படகில் இருந்ததாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here