கோத்தா கினபாலு:
இன்று மாலை 4 மணி நிலவரப்படி, சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 455 குடும்பங்களைச் சேர்ந்த 1,526 ஆகக் குறைந்துள்ளது, இந்த எண்ணிக்கை இன்று காலை 472 குடும்பங்களைச் சேர்ந்த 1,541 பேராக பதிவானது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சூக் மாவட்டத்தில் உள்ள நான்கு நிவாரண மையங்களில் 1,266 பேரும் (377 குடும்பங்கள்), மேலும் செலக்கான் நிரந்தர வெளியேற்ற மையத்தில் 260 பேரும் (78 குடும்பங்கள்) உள்ளனர் என்று சபா பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேநேரம் சிபிதாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் தங்கியிருந்த டேவான் செக்கோலா கெபாங்சான் படாங் பெரம்பாவில் உள்ள பிபிஎஸ் மூடப்பட்டுள்ளது.
இங்கு “மொத்தம் 19 கிராமங்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, அத்தோடு பியூஃபோர்ட்டில் 10 மற்றும் சூக்கில் ஒன்பது கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




















