கோலாலம்பூர்:
டத்தின் ஶ்ரீ பமீலா லிங் யூ காணாமல் போனது குறித்து, லிங்கின் மூன்று பிள்ளைகள் மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் ஏனைய உறவினர்களையும் விசாரணை நோக்கங்களுக்காக வாக்குமூலங்களை வழங்க போலீசார் அழைக்கலாம் என்று இன்று தெரிவித்தனர்.
“அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய கோலாலம்பூர் அல்லது ஜோகூர் பாருவுக்கு வருமாறு நாங்கள் அவர்களைக் கேட்கலாம் என்று, கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ ருஸ்டி முகமட் இசா கூறினார்.

இதுதவிர சிங்கப்பூரில் உள்ள “மலேசிய தூதரகத்திலும் நாங்கள் அவ்வாறு செய்யலாம்,” என்று அவர் இங்குள்ள கோலாலம்பூர் கான்டிஜென்ட் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பமீலா காணாமல்போனது தொடர்பில் இதுவரை 16 பேரிடம் வாக்குமூலம் பெறப்படத்தை ருஸ்டி உறுதிப்படுத்தினார்.
மேலும் லிங்கிற்கும் அவரது மனைவிக்கும் இடையே நடந்து வரும் விவாகரத்து நடவடிக்கைகளைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்து, அதனுடன் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பதைத் தீர்மானிக்க புலனாய்வாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
லிங் மற்றும் அவரது கணவர் டத்தோஸ்ரீ ஹா திங் சியு இருவரும் மே 2024 முதல் ஊழல் மற்றும் பணமோசடி குற்றங்களுக்காக MACCயின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.





















