மலாக்கா:
மலாக்கா மருத்துவமனையில் 11 மணி நேரம் காத்திருந்தும், 22 மாதக் குழந்தை கவனிக்கப்படாமல் விடப்பட்டதால் அதற்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்று திங்கள்கிழமை (மே 12) மலாக்கா மருத்துவமனைக்குத் தெரிவிக்கப்பட்டது என்று, மலாக்கா சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஒற்றுமைக் குழுவின் தலைவர் டத்தோ நங்வே ஹீ செம் கூறினார்.
“கடந்த மே 10 அன்று மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்துச் சென்றபோது, அவசர சிகிச்சை பிரிவில் அங்குழந்தைக்கு சிகிச்சை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக இந்த உத்தரவு திங்கள்கிழமை (மே 12) மலாக்கா மருத்துவமனைக்குத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக அந்தக் குழந்தையின் 27 வயது தாய், கடந்த சனிக்கிழமை (மே 10) பிற்பகல் 2.30 மணிக்கு மலாக்கா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்ததாக தந்து Facebook இல் வெளியிட்டுள்ள ஓர் பதிவில் கூறினார்.
“நாங்கள் மருத்துவமனைக்கு வந்தபோது, அங்கிருந்த தாதி ஒருவர் இரத்த மாதிரியை மட்டுமே எடுத்துக்கொண்டு, என் 22 மாத குழந்தையின் வெப்பநிலை 38, 39 மற்றும் இறுதியில் 40 டிகிரி செல்சியஸாக உயர்ந்தபோதும் கூட , அதை கவனிக்காமல் விட்டுவிட்டார்.
“நான் உதவி கேட்டுக்கொண்டே இருந்தேன், ஆனால் எனக்குக் கிடைத்த ஒரே பதில் காத்திருக்க வேண்டும் என்பதுதான் – அதாவது ஞாயிற்றுக்கிழமை (மே 11) அதிகாலை 1 மணியளவில் என் குழந்தைக்கு வலிப்பு ஏற்படும் வரை காத்திருப்பதுதான்” என்று அவர் ஒரு வீடியோவுடன் வெளியிட்டிரருந்த பதிவில் எழுதினார்.




















