ஆசியான் தலைமையை ஏற்கும் மலேசியா: சிலாங்கூர் தூய்மையால் ஒளிரட்டும்! ஊராட்சித் துறைகளுக்கு சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

சியான் 2025 தலைமையை மலேசியா ஏற்கிறது. இதனை முன்னிட்டு ஆசியான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பல்வேறு மாநாடுகள், சந்திப்புக்கள் நடைபெற உள்ளன.

இதனை முன்னிட்டு மலேசியாவுக்கு வருகைப்புரியும் தலைவர்களை வரவேற்கும் மிகப்பெரிய பொறுப்பை சிலாங்கூர் மாநிலம் ஏற்றுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி என்று குறிப்பிட்டார்.

மலேசியாவுக்கு வருகைப்புரியும் வெளிநாடுகளின் தலைவர்கள், பேராளர்களின் முதல் நுழைவு வாசலாக சிப்பாங் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கேஎல்ஐஏ), கேஎல்ஐஏ 2 திகழ்கிறது. இந்நிலையில் இவர்களுக்கு புத்தெழுச்சியையும் உற்சாகத்தையும் தரும் வகையில் சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உச்சபட்ச தூய்மையால் ஒளிர வேண்டும். இதனை அனைத்து மாவட்டங்களின் ஊராட்சித் துறைகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

BE AT KLIA AT LEAST FOUR HOURS AHEAD OF DEPARTURE - SJ Echo

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்திற்கு கிடைத்திருக்கும் மிக உயரிய கெளரவம் இந்த 2025 ஆசியான் தலைமை. இதன் வெற்றியில் சிலாங்கூர் மாநிலத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உள்ளதை நினைவில் கொண்டு தூய்மை முதல் உபசரணை வரை அனைத்திலும் முதன்மை பெற்றிருக்க வேண்டும் என்று அவர் வலியுறத்தினார்.

Selangor: Gateway to Asean and beyond | South China Morning Post

சாலைகள் முதல் கொண்டு அனைத்து அடிப்படை வசதிகளும் சிறந்த தரத்தில் இருக்க வேண்டும். ஒளியால் சிலாங்கூர் ஒளிர வேண்டும் என்று அமிருடின் மாநில மக்களையும் அரசு கேந்திரங்களையும் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here