கோலாலம்பூர்:
நாளை சோகோ ஷாப்பிங் வளாகத்திற்கு வெளியே நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பேரணியில், கூட்டத்தை மேற்பார்வையிடவும் நிர்வகிக்கவும் காவல்துறை (PDRM) தனது 80 பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.
திட்டமிடப்பட்ட பேரணி குறித்து காவல்துறை அறிந்திருப்பதாகவும், இதில் பொதுப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் ACP சுலிஸ்மே அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.
“நாங்கள் ஏற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடினோம், ஆனால் அவர்கள் பேரணியைத் தொடரும் முடிவில் உறுதியாக உள்ளனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.























