குவாந்தான்:
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையின் (LPT) 234.7 ஆவது கிலோ மீட்டரில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் சீன நாட்டவர் இருவர் உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் ஜெங்டாய் மற்றும் சுன்ஹுவா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் வான் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், மூன்று சீனப்பிரஜைகளை ஏற்றிச் சென்ற மெர்சிடிஸ் பென்ஸ் காரும், நான்கு பயணிகளுடன் உள்ளூர் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற நிசான் எக்ஸ்-டிரெயிலும் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.











