நெகிரி செம்பிலானில் 15 நிமிடம் பெய்த இடியுடன் கூடிய கனமழை; 88 வீடுகள் சேதம்

ஜெம்போல்:

நேற்று மாலை சிறுது நேரம் பெய்த கடுமையான இடியுடன் கூடிய மழையால் நெகிரி செம்பிலானின் கம்போங் பாரு ஆயிர் ஹித்தாம் மற்றும் ஃபெல்டா லுய் பாராட்டில் உள்ள 88 வீடுகள் சேதமடைந்தன.

MetMalaysia issues thunderstorm warning in Perak, Terengganu, Pahang ...

மாலை 4.30 மணியளவில் பெய்த இந்த கனமழை சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாகக் கூறப்படுகிறது, இதனால் கம்போங் பாரு ஆயிர் ஹித்தாமில் ஒன்பது வீடுகளும், ஃபெல்டா லுய் பாராட்டில் 79 வீடுகளும் பலத்த சேதத்தை எதிர்கொண்டன.

15 ஆம் திகதி வரை இடியுடன் கூடிய மழை..! பொதுமக்களுக்கு எச்சரிக்கை ...

சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களையும் அடையாளம் காணும் பணியில் தொடர்புடைய நிறுவனங்கள் இன்னும் ஈடுபட்டுள்ளதாக சுங்கை லுய் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் ராசி முகமட் அலி தெரிவித்தார்.

சேதமடைந்த வீடுகளின் தற்போதைய எண்ணிக்கை 88 ஆக இருந்தாலும், ஃபெல்டா லுய் பாராட்டில் வசிப்பவர்கள் தொடர்பில் இன்னும் முழுமையான சேத மதிப்பீடு செய்யப்பட்டுவருவதால், இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று முகமட் ராசி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here