பயமின்றி உண்மையைப் பேசியதற்காக ரஃபிஸியை பாராட்டுகிறேன் என்கிறார் நூருல் இசா

கோலாலம்பூர்:

த்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி உண்மையைப் பேசுவதிலிருந்தோ அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்து நிற்பதிலிருந்தோ ஒருபோதும் பின்வாங்கியதில்லை என்று PKR துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் தெரிவித்துள்ளார்.

ஜூன் 14 முதல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள பொருளாதார அமைச்சரான ரஃபிஸி, நாட்டின் அரசியலில் சிறந்த நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொருளாதார நீதி ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும் யோசனைகள் மற்றும் கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளார் என்று அவர் கூறினார்.

“அவரது பல கருத்துக்கள் மறக்கப்படாது. உண்மையில், அவை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் – அவரை நான் மிகவும் மதிக்கிறேன்,” என்று அவர் இன்று புதன்கிழமை (மே 28வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here