பாயான் லெபாஸ் தீ விபத்து : 19 ஆடுகள் பலி, ஆட்டுத்தொழுவத்துக்கு அருகில் இருந்த கார்கள் மற்றும் லோரி சேதம்

ஜார்ஜ் டவுன்:

கம்போங் ஜாவா பாயான் லெபாஸில் இன்று கால்நடை தொழுவம் தீப்பிடித்ததில் பத்தொன்பது ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

தீ விபத்து குறித்து மதியம் 12.58 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், தொழுவத்தில் வைக்கப்பட்டிருந்த 19 ஆடுகள் இறந்ததாகவும், ஒன்று மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டதாகவும் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) ஜான் சகுன் பிரான்சிஸ் கூறினார்.

தீ விபத்தில் மூன்று கார்கள் மற்றும் ஆட்டுத் தொழுவத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டன் லோ ரியும் பாதிக்கப்பட்டதாகவும், அனால் வாகனங்கள் 30 முதல் 90 சதவீதம் வரை சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பாயான் பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட குழு தீயை அணைக்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனது என்றும் அவர் கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த இழப்புகள் இன்னும் விசாரணையில் உள்ளன என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here