கோலாலம்பூர்:
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) முதல் நான்கு நாட்கள் பணிப் பயணமாக இங்கிலாந்து சென்றடைந்தார்.
உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு (மலேசியா அதிகாலை 3.30 மணிக்கு) ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்த அவரை , இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான மலேசிய தூதரக அதிகாரி அயர்லாந்திற்கான மலேசிய தூதர் டத்தோ ஜாக்ரி ஜாஃபர் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்த பணிப் பயணத்தின் நோக்கம்,தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET), சுற்றுலா மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மலேசியா-இங்கிலாந்து உறவுகளை வலுப்படுத்துவதே ஆகும்.
இந்தப்பயணம் சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், ஐரோப்பாவிலிருந்து மலேசியாவிற்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும், நாளை செவ்வாய் கிழமை இங்கிலாந்தில் மலேசியா வருகையாண்டு 2026 பிரச்சாரத்தை அவர் தொடங்க உள்ளார்.
இந்தப் பயணம் மலேசியா-இங்கிலாந்துக்கு இடையே இராஜதந்திர உறவுகளை விரிவுபடுத்தவும், மக்களுக்கும் நாட்டிற்கும் ஒத்துழைப்புக்கான அதிக வாய்ப்புகளைத் திறக்கவும் ஒரு முக்கியமான தளமாகவும் செயல்படும் என நம்பப்படுகிறது.





















