சுபாங் ஜெயா:
பேருந்து ஒன்று சாலை தடுப்புப் பலகையில் மோதி, விபத்துக்குள்ளானதில் ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.
கடந்த திங்கள் கிழமை ஷா ஆலம் விரைவுச் சாலையின் 35.8 கி.மீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்தது.
சுபாங் ஜெயா காவல்துறையின் அறிக்கையின்படி, இரவு 9.30 மணிக்கு விபத்து நடந்தபோது, பேருந்து 12 பயணிகளை ஏற்றிச் சென்றது.
“வலது பக்கத்திலிருந்து ஒரு கார் பாதையை வெட்டியதால் பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால் பேருந்து சாலை தடுப்பு பலகையில் மோதியது.
இந்த விபத்தில் ஒரு பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டது.





















