இந்தாண்டு ஹஜ்ஜு யாத்திரைக்கு சென்ற 10 மலேசியர்கள் மரணம்

மக்கா:

மக்காவில் மற்றுமொரு மலேசிய ஹஜ் யாத்ரீகர் உயிரிழந்தார், இதன் மூலம் இந்த்ஹாண்டு ஹஜ்ஜுப் பயணத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.

அப்துல் மாலிக் சுடின் எனும் 62 வயது நபர் கிங் அப்துல்லா மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

நேற்று இரவு சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் சீசன் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் துறை மத விவகார அமைச்சர் முகமட் நயிம் இதனைத் தெரிவித்தார்.

இன்றுவரை, ஹஜ் புனித பயணம் சென்ற ஒன்பது மலேசிய யாத்ரீகர்கள் மாரடைப்பால் இறந்துள்ளனர், ஒருவர் பாக்டீரியா தொற்று மற்றும் உறுப்பு செயலிழப்பால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here