ஈக்களுடன் யுத்தம்…!

selective focus of meat infested by many flies in the traditional market

பந்திங்:

டந்த 2 வாரங்களாக பந்திங்கிலுள்ள கம்போங் ஸ்ரீ சீடிங் எனுமிடத்தில் ஈக்களின் தொல்லை மோசமடைந்து வருகிறது என்று அங்கு வசிக்கும் மக்கள் முறையிட்டனர்.

இதனால், தங்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டி ருப்பதாக அவர்கள் தெரிவித் தனர். சமைத்த உணவை வைக்கவும் முடியவில்லை. அதுமட்டுமன்றி உணவுக் கடைகளிலும் மீன் போன்ற சமையல் பொருட்களை விற் கும் மளிகைக் கடைகளிலும் எங்கு பார்த்தாலும் ஈக்க ளாகவே உள்ளன என்று 60 வயதான டத்தோ ரம்லி கட்ரி தெரிவித்தார்.

ஈக்களின் தொல்லை நாளுக்கு நாள் மோசமடைகிறது. 2 வாரங்களாக இது நீடிக்கிறது. மேஜை மீது உணவு வைத்த மறுவிநாடி ஈக்கள் அங்கே குவிந்துவிடுகின்றன என்றார் அவர்.

எங்கிருந்து வருகின்றன?

ஈக்கள் எப்படித்தான் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வருகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது. இவை எங்கிருந்து வருகின்றன என்பதும் தெரியவில்லை. பசையைப் பயன்படுத்தி ஈக்களை ஒழிக்க முயன்று வருகின்றோம். உணவுகளை மூடியே வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை என அவர் கூறினார்.

ஆண்டுக்கு ஒருமுறை பிரச்சினை

ஈக்களின் தொல்லை ஆண்டுக்கு ஒருமுறையாவது ஏற்பட்டுவிடுகிறது என்று ரோஸ்லி என்பவர் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் இந்த ஈக்களுடன் நாங்கள் போராட வேண்டியுள்ளது. சமைத்த உணவுகளை மூடிவைத்து பாதுகாப்பதற்கே நேரம் போய்விடுகிறது என்றார் அவர். ஸ்ரீ சீடிங், ஜெஞ்ஜாரோம், கோலலங்காட் ஆகிய பகுதிகளிலும் இப்பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக அவர் சொன்னார். உணவுக்கடைகளிலும் மளிகைக்கடைகளிலும் ஸ்ரீ சீடிங்கிலுள்ள வீடுகளிலும் ஈக்களின் தொல்லை நீடித்துவருகிறது என்று அவர் கூறினார். இந்தக் கிராமத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பழைய கோழிப்பண்ணை உள்ளது. ஈக்களின் தொல்லைக்கு ஒருவேளை அது ஒரு காரணமா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றார் அவர்.

நோய் அபாயம்

எங்கு பார்த்தாலும் ஈக்களாக இருப்பதால் தொற்று நோய் ஏற்படலாம் என்று கவலைப்படுவதாக ரோஸ்லி தெரிவித்தார். ஈக்கள் மூலம் நோய் பரவினால் என்ன செய்வது? எங்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறோம் என்றார் அவர்.

உணவுக்கடையில் உணவு சாப்பிடும்போது அதில் நச்சுத்தன்மை இருக்குமா என்றும் அஞ்சுகிறோம். ஏனெனில் கடையில் சமைக்கப்படும் உணவு முறையாக மூடப்பட்டிருக்கிறதா அல்லது அதில் ஈக்கள் அமர்ந்திருக்குமா என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாத நிலையில் கடைகளில் சாப்பிடுவதற்கே பயமாக உள்ளது என்று அவர் மேலும் சொன்னார். மளிகைக்கடைகளில் மீன் போன்றவற்றை வாங்கும்போதும் கொஞ்சம் தயக்கமாகத்தான் உள்ளது என்று அவர் விவரித்தார்.

கோல லங்காட் நகராண்மைக்கழகத்தின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. விசாரணை நடத்திய பிறகு கோல லங்காட் நகராண்மைக்கழகம் இவ்விவகாரம் பற்றி அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here