கோலாலம்பூர்:
இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள ஐந்து குடியேற்ற வீடுகள் எரிந்து நாசமாகின.
குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாலை 1.45 மணிக்கு MERS999 லைன் வழியாக அவசர அழைப்பு வந்ததாக நகர தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுத் தளபதி ஆர்ம்டன் மஹத் தெரிவித்தார்.
“செபூத்தே தீயணைப்பு நிலையத்திலிருந்து ஆறு தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் ஹாங் துவா, பந்தாய் மற்றும் ஸ்ரீ ஹர்டமாஸ் தீயணைப்பு நிலையங்களின் ஆதரவுடன் மொத்தம் 27 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“தீ அதிகாலை 2.23 மணிக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, தற்போது பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.
அதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளிலும் அப்போது யாரும் இல்லை என்பதால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
அதிகாலை 1 மணியளவில் நடந்த இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள காண்டோமினித்திலிருந்து உயரமான தீப்பிழம்புகள் கொழுந்துவிட்டு எரிவதுபோல பல படங்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.




















