படுகாயமடைந்த இரண்டு UPSI மாணவர்கள் சுயநினைவுக்கு திரும்பியுள்ளனர்

ஈப்போ:

கெரிக், தாசிக் பாண்டிங் அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பல்கலைக்கழக பெண்டிகன் சுல்தான் இட்ரிஸ் மாணவர்கள் சுயநினைவு அடைந்து தற்போது உடல் நிலை சீரான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் 23 வயதான லிலி சுசானா மாட் யாகோப் மற்றும் 21 வயதான நோர் எரிகா எலிஷா முகமட் ஜைதி ஆகிய இரு மாணவர்களும் சிவப்பு மண்டலத்தில் இருந்து மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் தற்போது வழக்கமான வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் (HRPB) இயக்குநர் டாக்டர் சைபுல் அஸ்லான் ஷெரீப் கூறினார்.

தற்போது மருத்துவமனையில் 18 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here