கடைவரிசை வீட்டில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட வயதான தம்பதியரின் சடலம்

குவாந்தான்: ரவூப், கம்போங் சுங்கை ருவானில் உள்ள ஒரு கடைவரிசை வீட்டில் வயதான தம்பதியினர் இறந்து கிடந்தனர். ரவூப் மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் கூறுகையில், 75 வயதான வோங் டோங் செங்கின் உடல் சமையலறை தொட்டியின் முன் கிடந்து புழுக்கள் மொய்த்த  நிலையில் காணப்பட்டது.

அதே நேரத்தில் அவரது 73 வயதான மனைவி லோ காம் என்கோவின் உடல்  ஒரு அறையில் படுக்கையின் விளிம்பில் கிடந்தது.

ஆரம்ப விசாரணையில் எந்த குற்றச் செயல்களும் நடந்தற்கான அறிகுறி இல்லை எனவும் வீடு நல்ல நிலையில் இருந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ரவூப் மருத்துவமனையில் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகள், பிரேத பரிசோதனை முடிவுகள், பாதிக்கப்பட்ட இருவரின் மரணத்திற்கும் காரணம் கடுமையான நாட்பட்ட நோய்க்குறி (மாரடைப்பு) என்று அவர் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளாக அந்த மாது பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது கணவர் உலு காலி ஹெல்த் கிளினிக்கில் இரு சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது, மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here