நெல் ஜெயராமன் மகனின் கல்விச் செலவு – கொடுத்த வாக்கை காப்பாற்றி வரும் சிவகார்த்திகேயன்

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர் நெல் ஜெயராமன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 2018 ஆம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் வாக்குறுதி அளித்திருந்தார்.

அவ்வகையில், சிவகார்த்திகேயன் தான் கொடுத்த வாக்கை மீறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவை கட்டி வந்துள்ளார்

இந்நிலையில், பள்ளிப்படிப்பை முடித்த சீனிவாசனிடம் எந்தக் கல்லூரி மற்றும் என்ன படிப்பில் சேர விரும்புகிறாய் என்பதை விசாரித்து, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேசி அவரைச் சேர்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதை ஒரு அண்ணனாக இருந்து சிவகார்த்திகேயன் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here