ஆயிர் ஹித்தாம் டோல் சாவடி மீண்டும் திறக்கப்பட்டது

கோலாலம்பூர்:

சாலையில் ஏற்பட்ட இரசாயன கசிவு காரணமாக மூடப்பட்டிருந்த ஆயிர் ஹித்தாம் டோல் சாவடி முழுவதுமாக திறக்கப்பட்டதாக PLUS மலேசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை இரசாயனத்தை ஏற்றிவந்த லோரி சாலையில் தடம்புரண்டதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக டோல் சாவடி அனைத்து வாகனங்களுக்கும் தற்காலிகமாக மூடப்பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு பணிகளின் பின்னர், தற்போது ஆயிர் ஹித்தாம் டோல் சாவடி முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளதாக PLUS மலேசியா தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

ஆயிர் ஹித்தாம் டோல் சாவடி முழுவதுமாக திறக்கப்பட்டு விட்டது என்றும், அவ்வழியில் போக்குவரத்து சுமுகமாக இருப்பதாக PLUS நிறுவனம் மேற்கொண்ட கண்காணிப்பில் தெரிய வந்தது என்றும் அது கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here