வெற்றிலை மாலை சாற்றினால்…

வெற்றிலையாக அனைத்து தெய்வங்களுக்கும் படைக்கலாம். அதே சமயம் வெற்றிலை மாலை என்பதை படைப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளது. அந்த முறைப்படி வெற்றிலையை மாலையாக தொடுத்து தெய்வங்களுக்கு சாற்றினால் அதன் பலன் பல மடங்காக கிடைக்கும். எடுக்கின்ற காரிங்களும் வெற்றியை தருவதுடன், வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும்.

வெற்றிலை என்பது இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமான மங்கள பொருளாகும். சுப நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, அசுப நிகழ்ச்சிகளிலும் கூட வெற்றிலை, பாக்கு சேர்ந்த தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. கோவில்களில் சுவாமிக்கு அத்தனை நைவேத்தியங்கள், பழங்கள் படைத்தாலும், கடைசியாக வெற்றிலை தாம்பூலம் சமர்பித்த பிறகு தான் தீபாராதனை காட்டுவார்கள்.

தடபுடலாக விருந்திற்கு பிறகு வெற்றிலை பாக்கு போட்டால் மனம் மகிழ்ச்சி அடையும் என்பது ஐதீகம். அதனால் சுவாமியின் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக கடைசியாக தாம்பூலம் சமர்பிக்கும் வழக்கம் உள்ளது. தாம்பூலம் மங்களத்தின் அடையாளமாகும். வெற்றிலை என்பது மகாலட்சுமியின் சொரூபம். இது வெற்றியை தரக் கூடிய பொருளாகும்/

கோவில்களில் சுவாமிக்கு வெற்றிலை மாலை சாற்றுவதை பார்த்திக்கிறோம். பலரும் பரிகாரமாக வெற்றிலை மாலை சாற்றுவது உண்டு. ஆனால் முதலில் எந்தெந்த கடவுள்களுக்கு வெற்றிலை மாலை சாற்ற வேண்டும், எந்த முறையில் வெற்றிலை மாலையை, எந்த கிழமையில் சாற்றினால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்பதை தெரிந்து கொண்டு, வெற்றிலை மாலை சாற்றினால் அதன் முழு பலனும் கிடைக்கும். முழு முதற் கடவுளான விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றலாம். அதற்கு பிறகு அனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றலாம். வேறு எந்த தெய்வத்திற்கும் வெற்றிலை மாலை சாற்றக் கூடாது. மாறாக வெற்றிலை-பாக்கு தாம்பூலமாக படைத்து வழிபடலாம்.வெற்றிலை மாலை கட்டும் போது ஒற்றை படை எண்ணிக்கையிலேயே கட்ட வேண்டும்.

 

முதலில் இரண்டு வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் காம்பு பகுதியை கிள்ளி விட்டு, வெற்றிலையின் நடுவில் பாக்கு வைத்து கட்ட வேண்டும். கொட்டை பாக்கு, சுருள் பாக்காக இருந்தால் இரண்டு என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். அது கிடைக்கவில்லை என்றால் பாக்கு தூள் அல்லது சீவல் சிறிதளவு வைத்து மடித்து, அவற்றை மாலையாக தொடுக்க வேண்டும். வெறும் வெற்றிலையாகவோ அல்லது ஒரு வெற்றிலையை வைத்தோ மாலை கட்டி போடக் கூடாது.

 

பணக் கஷ்டம், கடன், நோய், திருமணம் தடை, படிப்பில் தடை என அனைத்து பிரச்சனைகளும் வீட்டில் உள்ளது, வீட்டில் நிம்மதியே இல்லை. என்ன செய்தால் இந்த ஒட்டுமொத்த பிரச்சனையும் தீரும் என்பவர்கள் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு 108 வெற்றிலை கொண்ட மாலை சாற்றி, தயிர் சாதம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். என்ன பிரச்சனையாக இருந்தாலும் அது தீர வேண்டும் என்றால் வெற்றிலை மாலை சாற்றி விட்டு 21 நாட்கள், ஆஞ்சநேயரை 11 முறை வலம் வர வேண்டும்.

 

தொடர்ந்து 21 நாட்களோ அல்லது 21 சனிக்கிழமைகளோ 108 வெற்றிலை மாலைகளை சாற்றி விட்டு, அனுமனை 11 முறை வலம் வந்து வழிபடுங்கள். குடும்பத்துடன் சென்று வழிபடுவது சிறப்பானதாகும். சுவாமியிடம் எந்த பிரச்சனையையும் சொல்லி முறையிடாமல், 11 முறை வலம் வரும் போதும் ராம், ராம் என்ற மந்திரத்தை ஆஞ்சநேயரை மனதில் நினைத்து சொல்லியபடியே வலம் வர வேண்டும். இப்படி செய்தால் இந்த வேண்டுதல் முடிப்பதற்குள் உங்களின் பிரச்சனைகளை ஆஞ்சநேயர் தீர்த்து வைப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here