சிரம்பானிலுள்ள ஒரு வீட்டிலிருந்து பெற்றோர் மற்றும் மகன் ஆகிய மூவரது சடலங்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு.

சிரம்பான் :

நேற்று மாலை, சிரம்பான் அருகே உள்ள தாமான் புக்கிட் கிரிஸ்டல் பகுதியிலுள்ள ஒரு வீட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அவ்வட்டாரத்தில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

May be an image of lighting, launderette and text

“அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் பேரில், போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும், பின்னர் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று பார்த்ததாகவும், வீட்டின் இரண்டு அறைகளில் மூன்று சடலங்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. முகமட் ஹட்டா செ டின் தெரிவித்துள்ளார்.

May be an image of 6 people, ambulance and text that says "POLIS"

அந்த சடலங்கள் 61 வயதான கணவன், அவரது 59 வயது மனைவி மற்றும் 30 வயதான மகன் என அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகனின் வலது கையில் வெட்டு காயம் இருந்தது, ஆனால் பெற்றோரின் உடலில் சந்தேகத்திற்கிடமான எந்தக் காயங்களும் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

May be an image of 7 people and motorcycle

சம்பவ இடத்தில் இரத்தக்கறையுடைய நாலு கத்தி, மருந்துகளும் மீட்கப்பட்டன.

மூன்று சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும், தற்போது இந்த வழக்கு ‘திடீர் மரணம்’ (Sudden Death Report – SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here