மலாக்கா பள்ளியில் தீ விபத்து – ஆசிரியர் அறைகள், நிர்வாக அலுவலகம் எரிந்து நாசம்!

ஜாசின்,

மலாக்கா மாநிலம் மெர்லிமாவில் உள்ள டாங் அனூம் இடை நிலைப் பள்ளியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில், இரண்டு ஆசிரியர் அறைகளும், நிர்வாக அலுவலகமும் முற்றாக எரிந்து நாசமானது.

இந்த தீவிபத்து காலை 5.30 மணியளவில் ஏற்பட்டதாகவும், யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  இதனிடையே, 999 அவசர அழைப்பை காலை 5.36 மணிக்கு பெற்றதும், இரண்டு நிமிடங்களில் முதல் தீயணைப்புப் படை சம்பவ இடத்தை அடைந்தது எனவும், 4 நிலையங்களைச் சேர்ந்த 19 தீயணைப்பு வீரர்கள் இந்த செயல்பாட்டில் ஈடுபட்டனர் எனவும் மெர்லிமாவைச் சேர்ந்த தீ மற்றும் மீட்புப் படையணியின் இயக்குநர் மொஹட் ஸுகூர் பின் முகமட் அலி கூறினார்.

இதுகுறித்து, பள்ளி நிர்வாகமும், கல்வி துறையும் இணைந்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here