சுரேஷ் ரெய்னாவின் புதிய படத்திற்காக தோனி செய்யப்போகும் காரியம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் விளையாடி தமிழக கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2022-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னா புதிய தமிழ் படமொன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படத்தை டி.கே.எஸ். என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் சரவணக்குமார் தயாரிக்கிறார். லோகன் படத்தை இயக்குகிறார். சந்தோஷ் சிவன் இசை அமைக்க சந்திப்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தில் மேலும் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் நடிகர், நடிகைகள் அறிமுக விழா பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அறிமுக விழாவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியை அழைப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

டோனி ஏற்கனவே தயாரிப்பாளராக அறிமுகமாகி தமிழில் எல்.ஜி.எம். என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவை நடிகராக அறிமுகப்படுத்த பெரிய தல தோனி சென்னைக்கு வர இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here