BN நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து பேசியது அசாதாரணமானது அல்ல என்கிறார் ஜம்ரி

தற்போதைய பிரச்சினைகள், அரசாங்கக் கொள்கைகள் குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு பிரதமர் அன்வார் இப்ராஹிமை சந்தித்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜம்ரி அப்துல் காதிர் தெரிவித்தார். புத்ராஜெயாவில் உள்ள அன்வாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த சந்திப்பு ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் வழக்கமான ஈடுபாடுகளின் ஒரு பகுதியாகும் என்று ஜம்ரி கூறியதாக பெரித்தா ஹரியான்  செய்தி வெளியிட்டிருந்தது.

கலந்துரையாடலின் விவரங்களை என்னால் வெளியிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட பிரச்சினை எதுவும் விவாதிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, பிரதமரிடமிருந்து தெளிவுபடுத்தப்பட வேண்டிய கொள்கைகள், தற்போதைய விஷயங்களைச் சுற்றியே இது இருந்தது என்று இன்று ஜெலி அம்னோ பிரிவு பிரதிநிதிகள் கூட்டத்தை தலைமை தாங்கிய பின்னர் அவர் கூறினார். ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் வழக்கமாக இதுபோன்ற அமர்வுகளை நடத்துகின்றன.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கூட்டம் இரவு 9.20 மணியளவில் முடிவடைந்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைப் பெற ஊடகங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

பக்காத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  செனட்டர்கள் ஜூலை 14 அன்று புத்ராஜெயாவில் உள்ள அன்வாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெறும் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தி ஸ்டாரில் வெளியான ஒரு செய்தியின்படி, போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக், இந்தக் கூட்டத்தில் நீதித்துறை நியமனங்கள் குறித்த விளக்கமும், சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் கேட்க ஒரு வாய்ப்பும் இருக்கும் என்று கூறியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here