குவந்தான்,
கடந்த மாதம் முகநூலில் பார்த்த போலியான ஒரு முதலீட்டுத் திட்டத்தை நம்பி முதலீடு செய்த ஹோட்டல் நிர்வாகி ஒருவர் RM211,000ஐ இழந்துள்ளார்.
49 வயதுடைய அந்த ஆண், முதலீட்டுத் திட்டம் குறித்த விளம்பரத்தை பார்த்த பிறகு, ஒரு பெண்மணியுடன் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டதாக பகாங் மாநில காவல்துறை தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஒத்மான் கூறினார்.
“அந்த பெண், அதிக வருமானம் கிடைக்கும் என்று உறுதியளித்து, முதலீட்டில் உடனே சேர ஒரு இணையதள இணைப்பையும் வழங்கினார். பின்னர், ஜூன் 4 முதல் ஜூன் 11 வரை, இரண்டு வங்கி கணக்குகளில் ஆறுமுறை தன்னுடைய சேமிப்புகளில் இருந்து பணம் செலுத்தினார்,” என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து மேலும் பணம் செலுத்துமாறு கூறியபோது, எந்த வருமானமும் கிடைக்காத நிலையில், அவர் இது ஒரு மோசடி திட்டம் என்று உணர்ந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் நேற்று குவந்தான் மாவட்ட காவல் தலைமையகத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது
























