ஜோகூர் பாரு:
ஜோகூர் பாருவில் உள்ள சில பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோகம் 26 மணி நேரத்திற்கு நிறுத்தப்படும் என SAJ Sdn Bhd தெரிவித்துள்ளது.
பாசீர் கூடாங்கில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த தற்காலிக நீர் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளது..
இதனால் தெப்ராவ் உட்பட ஜொகூர் பாருவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட பயனர்கள் பாதிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது.
அதேவேளை முக்கிய இடங்களான மருத்துவமனைகள், டயாலிசிஸ் மையங்கள் போன்ற அவசர தேவைக்கு நீர் டேங்கர்கள் மூலம் நீர் வழங்கப்படும் என Ranhill SAJ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனுஆர் அப்துல் கனீ தெரிவித்தார்.
























