மலாக்கா:
11 வயது மகனை தந்தை தாக்கியதில் அவனுக்கு தலையில் காயம் மற்றும் இடது கையில் சிராய்ப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை
தாமான் செங் பாருவில் உள்ள ஒரு வீட்டில் நடந்ததாகவும், டியூஷன் ஆசிரியரான 38 வயதான சிறுவனின் தாய், இரவு 9.11 மணிக்கு தஞ்சோங் மின்யாக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக மலாக்கா தெங்கா காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் உறுதிப்படுத்தினார்.
கிறிஸ்டோபரின் கூற்றுப்படி, இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பிய தாய், தனது மகனின் தலையில் பண்டேஜ் சுற்றப்பட்டிருப்பதைக் கண்டதாக தாயார் சொன்னார்.
“பொய் சொன்னதால் சிறுவனைத் தாக்கியதாக தனது கணவர் ஒப்புக்கொண்டதாக புகார்தாரர் தெரிவித்தார்,” என்று கிறிஸ்டோபர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வீட்டு வன்முறை மற்றும் குழந்தைகள் நலன் குறித்த சட்டங்களின் கீழ் இந்த வழக்கை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.





















