ஜோகூர் பாரு,
ஜோகூர் பாருவில் ஜாலான் அப்துல் சமாட் சாலையில் திறந்துகிடந்த பெரிய ஒரு குழிக்குள் விழுந்து பள்ளி பேருந்து பெரும் விபத்துக்குள்ளானது. இதில் 16 பள்ளி மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களில் சிலர் காய் கால்கள் உடைந்தும், எலும்புகள் முறிவடைந்தும், பெரும் காயங்களுக்கு உள்ளதாகவும் இப்போது அவர்கள் சுல்தானா அமினா மருத்துவமனையில் (HSA) அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் செய்திகள் வெளியாகியுள்ளன,
“பாதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலையை மருத்துவமனை மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து தொடர்ந்து பெற்றுள்ளேன். அவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையும், உடல்நல கண்காணிப்பும் வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறேன்,” என்று ஜோகூர் மாநிலக் கல்வி மற்றும் தகவல் குழு தலைவர் அஸ்னான் தாமின் தெரிவித்தார் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
விபத்தின் காரணம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், எதிர்காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான இந்தச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. காயமடைந்த மாணவர்கள் விரைவில் பூரண நலமுடன் மீள்வார்கள் என நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்,” என்றும் அவர் மேலும் கூறினார்


















