கணேஷ் பாபு தலைமையிலான குழுவினரின் மறு மலர்ச்சி மாறுவோம் மாற்றுவோம் :இது ஒரு வாக்குறுதி அல்ல இது ஒரு உறுதிமொழி

மலேசிய இந்து சங்கத்தின் மறு மலர்ச்சி அணியினர் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் நடைமுறை திட்டங்களை 100 நாட்களில் உறுதி செய்து செயல்படுத்துவதுதான் என்று கணேஷ்பாபு தலைமையிலான  குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் கீழ்க்காணும் ஒன்பது முக்கியமான செயல்திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.  சங்கத்தின் ஆண்டுக்கூட்டம் வரும் 20.7.2025 தோட்ட மாளிகையில் நடைபெறவுள்ளது.

 

1. அவசர ஆண்டுக்கூட்டம் நடத்தி சட்ட திருத்தம் செய்வது

மலேசிய இந்து சங்கத்தின் நடைமுறை, நிர்வாகக் கோட்பாடுகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அவசர பொதுக்கூட்டம் கூட்டப்படும். இது அமைப்பின் நவீன தேவை மற்றும் எதிர்கால வளர்ச்சியைத் தழுவும்.

 

2. அனைத்து மாநிலம், வட்டார, மத்திய நிர்வாகத்தினருக்கும் KPI (முக்கிய செயல்பாட்டுக் குறியீடு) செயல்படுத்தல்

ஒவ்வொரு நிர்வாக உறுப்பினருக்கும் செயற்குழு மற்றும் பொறுப்புகள் தொடர்பான 6 மாத செயல்திறன் மதிப்பீடு (KPI) அமல்படுத்தப்படும். இதன் மூலம் செயல்திறனையும் பொறுப்புணர்வையும் மேம்படுத்த முடியும்.

3. அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்குதல்
நமது சமய அறமும் பண்பாட்டு மரபும் சிறுவயதில் தோன்ற வேண்டும். அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் (SK, SJK(T)) இலவசமாக திருக்குறள் நூல் வழங்கப்படும்.

4. ஆயுட்கால உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல்
மலேசிய இந்து சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான, தரமான உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்படும். இது அவர்களது சட்டபூர்வ அந்தஸ்தை உறுதி செய்யும்.

5. மாநில மற்றும் வட்டார நிர்வாகிகளுக்கு சனாதன தர்மம் மற்றும் சமயக் கல்வி பயிற்சி
நிர்வாகிகளுக்கு வாரம் ஒருமுறை ஆன்மீக/சமயக் கல்வி மற்றும் சனாதன தர்மம் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இது அவர்களது ஆன்மீகப் பயணத்தையும், சமய விழிப்புணர்வையும் வலுப்படுத்தும்.

6. அனைத்து இந்து குடும்பங்களுக்கு இல்ல வழிபாட்டு கையேடு வழங்குதல்
தற்போது வீட்டில் வழிபாடு மேற்கொள்ளும் குடும்பங்களுக்கு ஒரு வழிகாட்டி கையேடு தயாரிக்கப்படும். இந்து சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இது இலவசமாக வழங்கப்படும்.

7. ஒவ்வொரு மத்திய செயலை உறுப்பினருக்கும் சமூக சமய பொறுப்பு வழங்குதல்
மத்திய செயலை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சமூக மற்றும் சமயத் திட்ட பொறுப்பு அளிக்கப்படும். இது வழிகாட்டும் ஒழுங்குமுறை மூலமாக தங்கள் பங்களிப்பை அதிகரிக்க உதவும்.

8. ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைப்பெறும் “ஆலய மக்கள் சந்திப்பு”
ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ம இ ச அலுவலகத்தில் மக்கள் மற்றும் ஆலய நர்வாக சந்திப்பு நிகழ்வு நடைபெறும். பொதுமக்களின் சமய சமூக பிரச்சனைகள், ஆலய பிரச்சனைகள், ஆலோசனைகள் உள்ளிட்டவை நேரடியாகக் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

9. அட்சய பாத்திரம் திட்டம் நாடு முழுவது விரிவுபடுத்தப்படும்.

மறு மலர்ச்சி என்பது வெறும் ஒரு கூற்று அல்ல. இது செயலில் காணும் மாற்றத்தின் பெயர். இந்த 100 நாள் செயற்பாட்டு திட்டம், நம்பிக்கையை மீட்டெடுக்கவும், இந்திய சமூகத்திற்கான ஒரு புதிய ஒளிக்கீற்றாகவும் அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here