பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதல் தீவிரம்: நாட்டின் எல்லைப் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது -டத்தோஸ்ரீ அயோப் கான்

ஈப்போ :

ஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான மோதல்களைத் தொடர்ந்து, நாட்டின் எல்லைகள் மற்றும் நுழைவு வாயில்களில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை போலீசார் கடுமையாக்கி வருகின்றனர்.

நாட்டின் சட்டங்களை மீறுவதற்கு யாரேனும் தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டால், தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய காவல்துறை துணை தலைவர் கண்காணிப்பாளர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

“தற்போதைக்கு கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய செயல்களை நாம் முன்கூட்டியே கண்டறியகூடிய வகையில் எமது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது ” என்று VAT இன் 54 வது ஆண்டு விழாவை நடத்திய பின்னர், நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here