இந்தாண்டு மலேசியாவிற்கு வந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகரிப்பு

கோலாலம்பூர்:  

இந்தாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை மலேசியாவிற்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டின் முதல் ஐந்து மாரத்திலேயே மலேசியா 16.9 மில்லியன் அனைத்துக் சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 20% அதிகமாகும் என்று அமைச்சகம் கூறியது.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மலேசியாவின் மொத்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளில் பாதி பேர் அண்டை நாடான சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளனர். சுமார் 8.34 மில்லியன் சுற்றுலா பயணிகள் மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இந்தோனேசியாவிலிருந்து 1.82 மில்லியன், சீனாவிலிருந்து 1.81 மில்லியன், தாய்லாந்திலிருந்து 1.06 மில்லியன் சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வந்துள்ளனர் என்று அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மலேசியா 2026 ஆம் ஆண்டில் 47 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here