கோலாலம்பூர்,
செலவுக் கட்டுப்பாட்டையும் வாழ்நிலைத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், டாருல் ஏஹ்சான் இலவச குடிநீர் திட்டம் (SADE) 2025 ஆம் ஆண்டின் இறுதி வரை விண்ணப்பத்திற்காக திறந்திருப்பதாக Air Selangor தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் வழியாக, தகுதியுள்ள தரப்பினருக்கு மாதம் 20 கன மீட்டர் (20m³) நீர் இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
திட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர்: https://www.airselangor.com/services/sade?lang=ms என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம். அல்லது 15300 என்ற இலவச எண்ணில் அழைக்கலாம்.
மேலும், Air Selangor அலுவலகம் அல்லது கிளை அலுவலகங்களுக்கு சென்று நேரிலும் விவரங்களை பெறலாம்.
2024 டிசம்பர் வரையிலான தரவின்படி, 324,000 கணக்குகள் SADE திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. “இந்த ஆண்டிற்குள் 500,000 பயனாளர்கள் வரை இந்தத் திட்டத்தில் இணைவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது,” என்று Air Selangor தலைமை செயல்முறை அதிகாரி ஆடாம் சுஃபியான் கஸாலி தெரிவித்தார்.
தற்போது விண்ணப்பிக்கும் நிலையில் சிக்கல் காணப்படுபவர்களுக்கு உதவ, Air Selangorர் குழு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.
மடானி நற்பணிக்கொள்கையின் ஒரு பகுதியாக, இந்த திட்டம் சமூக நீதி மற்றும் அடிப்படை வசதிகளின் சமவிகித விநியோகத்தை உறுதிசெய்யும் முகமாக செயல்படுகிறது.
























