இந்த வாரம் சனிக்கிழமை நடைபெறவுள்ள பேரணியை அமைதியான முறையிலும் ஒழுங்காகவும் நடத்துமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசாங்கத்தின் ‘மலேசியா மாடானி’ திட்டத்தின் அடிப்படையில் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும், எதிர்ப்பு கருத்துகள் வந்தாலும் அவை சட்டப்பூர்வமாகவும் பொது அமைதிக்கு பாதிப்பளிக்காதவையாக இருந்தால், அவை கட்டுப்படுத்தப்படாது என்றும் பிரதமரின் மூத்த ஊடக செயலாளர் Tunku Nashrul Abaidah தெரிவித்துள்ளார்.
இந்த பேரணியில் 10,000 முதல் 15,000 பேர் வரை பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிரதமர் அலுவலக (PMO) தினசரி செய்திக் குறிப்பில், பொதுப் பாதுகாப்பையும் பேரணியை சுமூகமாக நடத்துவதையும் உறுதி செய்வதற்கு தகுந்த ஒத்துழைப்பை வழங்குமாறு காவல்துறைக்கு அன்வார் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், தேசிய தினத்தையும் மலேசியா தினத்தையும் முன்னிட்டு “Bersama Malaysiaku” என்ற தளத்தை அரசு தொடங்கியுள்ளது. இது மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியாகும். மக்கள் தங்களது புகைப்படங்களை bersamamalaysiaku. மற்றும் malaysiamadani.gov.my.
அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்ற முடியும். தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்கள் பிரதமரின் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும்.
இந்த தளம் , ஜூலை 31ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள 13வது மலேசிய திட்டத்தின் நோக்குகளுடனும் ஒத்துழைந்து செயல்படும் எனவும் அவர் கூறினார்.




















