பிரதமருக்கு எதிரான பேரணி அமைதியாக முடிவுற்றது

கோலாலம்பூர்,

மெர்டேகா சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை நடத்தப்பட்ட பாஸ் தலைமையிலான பேரணி அமைதியாக முடிவடைந்தது. இறுதியில் தேசிய கீதத்தை பாடிய பிறகு, பேரணியில் கலந்து கொண்டவர்கள் பரபரப்பில்லாமல் கலைந்து சென்றனர்.

   இந்த பேரணி ஐந்து பகுதிகளில் இருந்து தொடங்கி, வரலாற்றுப் புகழ்பெற்ற மெர்டேகா சதுக்கத்தை நோக்கி நடத்தப்பட்டது. இதில் பெரும் சிறப்பு என்னவெனில் எந்தவொரு குழப்பமோ தடுக்கப்பட்ட சம்பவங்களும் இல்லாமல், நெகிழ்ச்சியாக முடிந்தது.

பேரணி முடிந்ததும், நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட குப்பைகள் மற்றும் உணவுப் கழிவுகளை அமைப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் துப்புரவு செய்தனர்.

பேரணியில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஸ்ரீ முகைதின் யாசின், பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்ஸா மற்றும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here