ஷா ஆலம்,
Cancer நோயாளிகள் வாழ்க்கையின் பலமான பக்கத்தை நோக்கிச் கவனம் செலுத்தி எப்போதும் நேர்மறை மனப்பாங்கை கடைபிடிக்க வேண்டும் என்று, பிரதமரின் மனைவி டத்தோ’ ஸ்ரீ டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் இன்று கேட்டுக்கொண்டார்.
ஷா ஆலமில் நடைபெற்ற பெண்களுக்கான Cancer விழிப்புணர்வு மற்றும் ஆதரவு அமைப்பின் (KAWAN) தொண்டு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் , “Cancer என்பது முடிவல்ல; நம்மை இன்னும் வலிமைப்படுத்த ஒரு வாய்ப்பு. சிறிய விஷயங்களையும் மதித்து நம்பிக்கையுடன்க் கடந்து செல்லுங்கள்,” என்றார்.
நோயாளிகளின் சுமையை இலேசாக்க Peka B40 மற்றும் MySalam மானியத் திட்டங்கள் வழி அரசாங்கம் நிதி உதவி, மருத்துவ உபகரணங்கள் மற்றும் போக்குவரத்து செலவுக்கான உதவியை வழங்கி வருவதாகத் தெரிவித்தார். தேசிய மக்கள் மற்றும் குடும்ப வளர்ச்சி வாரியம் (LPPKN) உட்பட அரசு–தனியார் மருத்துவமனைகள் குறைந்த கட்டணத்தில் ஆரம்ப கட்ட Cancer பரிசோதனையும் நடத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் மொத்தம் 330 நபர்கள் கௌரவிக்கப்பட்டனர், அவர்களில் 126 பேர் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த புற்றுநோயாளிகள்.



















