தாய்லாந்து-கம்போடியா இடையிலான சமாதானம்: மலேசியா நெறிப்படுத்திய திறன் பாராட்டத்தக்கது – IKIM

கோலாலம்பூர்,

தற்போதைய ஆசியான் தலைவமைத்துவ நாடாக இருக்கும் மலேசியா, உறுப்பினர் நாடுகளுக்கு இடையிலான அமைதியான தீர்வுகளையும் தூதரக பேச்சுவார்த்தைகளையும் மேம்படுத்தும் தலைமைப் பங்கு வகித்து வருவதாக மலேசிய இஸ்லாமிய புரிந்துணர்வு அமைப்பு (IKIM) தெரிவித்துள்ளது.

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே இடம்பெற்ற தற்காலிக சமாதான ஒப்பந்தத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முன்னெடுத்த தீர்வுப் பணி, இஸ்லாமிய நெறிமுறைகள் மற்றும் நீதி, அமைதி ஆகியவற்றின் சித்திரமாகும் என அதன் தலைவர் டத்தோ டாக்டர் மொஹமட் அஸாம் மொஹமட் கூறினார்.

“மலேசியா இரு நாடுகளையும் ஒரு மேசை அருகே கொண்டு வந்து சமாதானத்தை உருவாக்கியது, இராணுவ சக்தியால் அல்லாது, நீதியுடனும் நேர்மையுடனும் கருத்துப் பேச்சுவார்த்தை நடத்தும் திறனே உண்மையான வலிமையாக இருக்கிறது என்பதை உலகிற்கு காட்டுகிறது,” என அவர் குறிப்பிட்டார்.

இந்த சாதனையைப் பாராட்டி, வளர்ச்சி மற்றும் நலனுக்கான அடிப்படை அமைதியை அனைத்து மலேசியர்களும் மதிக்க வேண்டியது முக்கியம் என IKIM வலியுறுத்தியுள்ளது.

தாய்லாந்து-கம்போடியா இடையிலான 817 கிமீ வரையறுக்கப்படாத எல்லை பிரச்னை நீண்டநாள் சிக்கலாக இருந்து வந்தது. கடந்த மே 28-இல் பிரியா விகேர் அருகே ஏற்பட்ட மோதலில் ஒரு கம்போடியா வீரர் உயிரிழந்ததுடன், பதற்றம் மேலும் தீவிரமானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here