செத்தியா ஆலம், ஜாலான் செத்தியா பிரிமாவில் நடந்த கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, 30 வயது நபர் பொதுமக்களால் கைது செய்யப்பட்டார். ஷா ஆலம் காவல்துறைத் தலைவர் இக்பால் இப்ராஹிம் கூறுகையில், சந்தேக நபர் போலி எண் தகடு கொண்ட மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மாலை 7 மணியளவில் 37 வயது நபரிடமிருந்து ஒரு பையைப் பறிக்க முயன்றார்.
பாதிக்கப்பட்டவர் எதிர்த்துப் போராடினார், இதனால் சந்தேக நபர் கீழே விழுந்தார். அவர் ஓட முயன்றார். ஆனால் பொதுமக்களின் உதவியுடன் பிடிபட்டார் என்று அவர் கூறினார் என்று கோஸ்மோ தெரிவித்தார். இரண்டு கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட சந்தேக நபர் நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இக்பால் கூறினார்.








