பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டி, இளம்பெண் உயிரிழக்க காரணமானார்: – போலீஸ் Corporal மீது குற்றச்சாட்டு

GURUN,

பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டி, ஒரு இளம்பெண் உயிரிழக்க காரணமானதற்காக போலீஸ் Corporal ஒருவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அஸார் மத் சைனி (வயது 52) என்பவர், கடந்த ஜூலை 28 ஆம் தேதி இரவு 9 மணியளவில் Guar Chempedak பகுதியில் உள்ள ஒரு சிக்னல் அருகே மோட்டார் சைக்கிள் ஓட்டிய மாணவன் முஹம்மத் நூர் இமான்தானியால் முகமட் ரோஷிடி (வயது 16) என்பவரை மோதி உயிரிழக்கச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றம், 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் (பிரிவு 41(1))-இன் கீழ் வரும் குற்றமாகும். இதற்கான தண்டனை 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக RM50,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குற்றவாளியான அஸார், யான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு ஒரு சரீர பிணையுடன் 6,000 வெள்ளி பிணையிலும், செப்டம்பர் 29 ஆம் தேதி ஆவணங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here