ஒரு நாட்டை தாம் உருவாக்க வேண்டுமென்கிற கனவை நிஜமாக்கியுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் டேனியல் ஜாக்சன். வெறும் 400 பேர் குடிமக்களாக உள்ள இந்த புதிய நாடு “வெர்டிஸ்” என்று அழைக்கப்படுகிறது.
குரோஷியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளுக்கிடையிலான டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் உள்ள உரிமை கோரப்படாத நிலப்பகுதியை, “பாக்கெட் 3” என அழைக்கப்படும் இந்த பகுதியில், ஜாக்சன் வெர்டிஸ் குடியரசாக அறிவித்துள்ளார். இந்தப் பகுதி, எந்த நாட்டின் அதிகாரப்பூர்வ உரிமையிலும் இல்லை என்பதால், இவர் இதை தனது நாடாக அமைத்துக்கொண்டார். கருதப்படுகிறது.
14 வயதிலேயே கனவு – 18-ஆவது வயதில் செயலாக்கம்! ஜாக்சன் தனது 14வது வயதில் முதலே ஒரு புதிய நாடு உருவாக்கும் கனவைக் கண்டார். 2019-ல் வெர்டிஸ் குடியரசின் சுதந்திரத்தை அறிவித்த பிறகு, அவர் ஒரு கொடி, அரசியலமைப்பு, அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை ஆகியவற்றை உருவாக்கியுள்ளார்.
400 குடிமக்கள், மூன்று மொழிகள், யூரோ நாணயம்!
இப்போதைக்கு வெர்டிஸ் நாட்டில் 400 குடிமக்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. நாட்டின் நாணயமாக யூரோ பயன்படுத்தப்படுகிறது. வெர்டிஸ் நாட்டை குரோஷியாவின் ஓசிஜெக் நகரத்திலிருந்து படகு மூலம் மட்டுமே அணுக முடியும்.
சவால்கள் தொடரும் நிலையில்…
வெர்டிஸ் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குரோஷிய அதிகாரிகள் கடந்த 2023 அக்டோபரில் ஜாக்சன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்தனர். தற்போது அவர் குரோஷியாவிற்குள் நுழைய முடியாத lifelong ban-ஐ எதிர்கொண்டு வருகிறார். இதனால், செர்பியா வழியாகவே மக்கள் வெர்டிஸுக்கு செல்ல வேண்டியுள்ளது.
வெர்டிஸ் பாஸ்போர்ட், குடியுரிமை மற்றும் எதிர்காலத்துக்கான நோக்கம்
வெர்டிஸ் குடிமகனாக சேர விரும்புபவர்களில், மருத்துவம், பாதுகாப்பு அல்லது சட்ட துறையில் திறமை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அவர்களுக்கான பாஸ்போர்ட் வழங்கப்பட்டாலும், அது சர்வதேச பயணங்களுக்கு செல்லுபடியாகாது என்பதை ஜாக்சன் எச்சரித்துள்ளார்.
அதிபராக இருந்தாலும், தனக்கு அதிகார வெறி இல்லை என்றும், எதிர்காலத்தில் ஜனநாயகத் தேர்தல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாகவும், இருதரப்பு நாட்டு உறவுகளை அமைதியாக கட்டமைக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.





















