Vape தடைக்கான நிபுணர் குழுவின் பரிந்துரை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் : சுகாதார அமைச்சகம்

கங்கார்,

Vape பயன்பாட்டைத் தடை செய்யும் நிபுணர் குழுவின் பரிந்துரையை, ஆய்வு முடிந்தவுடன் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார்.

“இது ‘தடை செய்யலாமா வேண்டாமா’ என்ற கேள்வி இல்லை; நிச்சயம் தடை செய்யப்படும். அமைச்சரவை விவாதத்திற்காக விரைவில் முன்வைக்கப்படும்,” என்று இன்று ஒரு நிகழ்வில் பேசியபோது அவர் கூறினார்.

2024-ஆம் ஆண்டின் பொது சுகாதாரத்துக்கான புகைப்பொருள் கட்டுப்பாட்டு சட்டம் (Act 852) அமல்படுத்தப்பட்டதிலிருந்து, சந்தையில் கிடைக்கும் புகைப்பொருள் வகைகள் 6,824-ல் இருந்து 2,794-ஆக குறைந்துள்ளதை அவர் மேலும் குறிப்பிட்டார்.

“கடுமையான அமலாக்கத்துடன், சிகரெட் மற்றும் வேப் விற்பனையை பயனுள்ள முறையில் கட்டுப்படுத்த முடியும். சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் வேப்பிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here