போதையில் 26 வயது இளைஞன் ஓட்டிய கார் மோதியதால் போலீஸ் கான்ஸ்டபிள் பலி

சிரம்பான்,

சிரம்பான் அருகே ஜாலான் தெமியாங் பகுதியில் இன்று காலையில், 23 வயது போலீஸ் கான்ஸ்டபிள்  ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும்போது, மது போதையில் நிதானமின்றி வேகமாக ஓட்டிய 26 வயது இளைஞரின் Perodua Bezza கார் மீது மோதியதால் அவர் பலியாகி உள்ளார்.

முதல்கட்ட விசாரணையில், சம்பவம் 1:01 மணியளவில் நடந்தது எனவும் இதில் பாதிக்கப்பட்ட போலீசாரின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது என்றும் Tuanku Ja’afar (HTJ) மருத்துவமனையின் அவர் அவசரப்பிரிவில் சிகிச்சை பெறும்போது சில மணி நேரத்திற்குள் உயிரிழந்தார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அந்த போலீஸ் கான்ஸ்டபிள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த போது, எதிர் பாதையில் வந்த Perodua Bezza வாகனம் கட்டுப்பாடு இழந்து மோதியுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தலைவர் ACP மொஹமட் ஹட்டா சே தின் தெரிவித்தார்.

சந்தேகநபர் கைது செய்யபப்ட்டு 6 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் , மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தால் 019-8461792 என்ற எண்ணுக்கு உடன் தொடர்பு கொள்ளுமாறு போலீஸ் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here