முஹிடினின் தளர்வான கூட்டணி மற்றொரு வசதிக்கான திருமணம் என்கிறார் புவாட்

­அரசாங்கக் கூட்டணிக்கு வெளியே 11 கட்சிகளின் தளர்வான கூட்டணி உருவாவதை அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி குறைத்து மதிப்பிட்டுள்ளார்.  இது மற்றொரு “வசதிக்கான திருமணம்” என்று விவரித்துள்ளார். 2019 இல் பாஸ் – அம்னோ இடையே உருவாக்கப்பட்ட முஃபாகாட் நேஷனல் ஒப்பந்தம், கூட்டணியின் சில ஆண்டுகளுக்குப் பிறகு முறிந்தது, ஒரு காலத்தில் இரு கட்சிகளுக்கும் இடையிலான “வசதிக்கான திருமணம்” என்றும் விவரிக்கப்பட்டது.

சரவாக் அல்லது சபாவிலிருந்து எந்தக் கட்சிகளும் அதில் பங்கேற்காததால், பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் நேற்று அறிவித்த குழு “தளர்வானது” என்று கருதப்பட்டதாக புவாட் ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார். அது மிகவும் கடுமையானதாக இருந்தால், மஇகாவில் சேருவதும் கடினமாக இருக்கும். ஏனெனில் கட்சி வரையறுக்கப்பட்ட ஒத்துழைப்பை மட்டுமே விரும்புகிறது என்றார்.

கடந்த வாரம், மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், மஇகா – பெரிக்காத்தான் நேஷனல் இடையே அரசியல் திசை குறித்து முறைசாரா விவாதங்கள் நடத்தப்பட்டதாகக் கூறினார். மஇகா பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிப்பது மற்றும் தேசிய முன்னணியில் இருந்து வெளியேறுவது தொடர்பான பல தீர்மானங்கள் கெடா, பேராக், பினாங்கில் உள்ள கட்சியின் மாநிலத் தலைமைகளால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், கட்சியின் தலைமை இந்த விஷயத்தை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here